திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், முள்ளிப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ராயமங்கலம் கிராமத்தில், 350 வீடுகளும், பூண்டி கிராமத்தில், 150 வீடுகளும் உள்ளன.
மேற்கண்ட இரண்டு கிராமங்களுக்கும், ஒரே கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த கிணற்றில் சேறு அதிகமாகியுள்ளதால், நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், போதிய அளவு குடிநீரை, கிராமங்களுக்கு வினியோகம் செய்ய முடியவில்லை.
எனவே, மேற்கண்ட கிணற்றை துார் வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், குடிநீர் தேவைக்காக, புதிய கிணறு தோண்டப்பட்டுள்ளது. இந்த கிணறும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல், ஒரு ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, மேற்கண்ட புதிய கிணற்றையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.