சென்னை:மாநில அளவிலான 'ஓபன் சப் - ஜூனியர்' பேட்மின்டன் போட்டி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பேட்மின்டன் மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, 261 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.
இதில், 11 முதல் 15 வயதுக்குட்பட்ட மூன்று வயது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனிநபர்,இரட்டையர் என, போட்டிகள் நடந்தன.
குறிப்பாக, 11 வயதுக்கு உட்பட்ட சிறுமியரில், சென்னையைச் சேர்ந்த சிறுமி மிருதுளா முதலிடத்தையும், திருச்சி நிதிக் ஷா இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
அதேபோல், 15 வயதுக்குட்ட சிறுமியரில், கோவை கிருத்யா முதலிடமும், சென்னை ஸ்வாதி இரண்டாமிடமும் பிடித்தனர்.
சிறுவர்களில் மதுரை ஜெனோ ராகன் முதலிடமும், சுப்ரித்ரோஷன்இரண்டாமிடமும் பிடித்தனர்.