துர்நாற்றத்தால் அவதி
திருமழிசை பேரூராட்சியில், ஜெகந்நாத பெருமாள் கோவில், ஒத்தாண்டேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பேரூராட்சியில் பாதாள சாக்கடை முறையாக இல்லாததால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் ஜெகந்நாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடையை சீரமைத்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டி. பால்ராஜ், திருமழிசை.