பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் இறந்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் எம்.கே.நகரில் வசித்தவர் செந்தில் குமார், 30; டெம்போ டிரைவர். நேற்றுமுன்தினம் காலை, 5:30 மணிக்கு புதுப்பாளையம் ரயில் பாதை அருகே காலைக்கடன் கழிக்க சென்றார். அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, தலையில் அடிபட்டு, அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்து, மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.