அன்னுார்:காடை குல செல்வநாயகி அம்மன் அறக்கட்டளை, கோவை மாசானிக் குழந்தைகள் மருத்துவமனை, மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் பிள்ளையப்பம்பாளையத்தில் வரும் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடக்கிறது.
முகாமில், பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், தோல் குழந்தைகள் மருத்துவத்திற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். முகாமில் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
'பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்,' என அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.