வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை காணும் என, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' அறிவித்துள்ளது.
![]()
|
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஒருமித்த மதிப்பீடுகளின்படி, அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6 சதவீத வளர்ச்சியை எட்டக்கூடும்.
மூலதனம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்படும்.
மேலும், அடுத்த ஐந்து நிதியாண்டுகளில், பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நிதியாண்டில், பெரு நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்
கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
.

சராசரி சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும். இது, 2024ல் 5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணித்துஉள்ளதும் குறிப்பிடத் தக்கது.
அடுத்த நிதியாண்டில், இந்திய நிறுவனங்களின் வருவாய் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement