திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை சங்குமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் குமார் மனைவி கோமதி, 36. அதே பகுதியில், டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர், கடந்தாண்டு தொழுதாவூர் கலைஞர் நகரில் வசிக்கும் லட்சுமி என்பவரின் குடும்ப செலவிற்காக, 7 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லட்சுமி வீட்டிற்கு சென்று பணத்தை திரும்பி கேட்டபோது, லட்சுமி, மகன் மகேஷ், கணவர் ரவி, மகள் தேன்மொழி உள்ளிட்ட நால்வரும் சேர்ந்து கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, கோமதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.