திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் அமைந்துள்ளது, ஜெகந்நாத பெருமாள் கோவில்.
இங்கு, ஆழ்வார் பிறந்த தளம் அமைந்துள்ள பகுதியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 80 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் புளியமரம் உட்பட பல மரங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான புளியரம் ஒன்றை, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அகற்ற வேண்டுமென, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் உள்ள மரத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், 200 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை, அந்த தனிநபர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினார்.
தகவலறிந்த ஜெகந்நாத பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement