படப்பை:தாம்பரம் அருகே பம்மல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 45. தனியார் ஊழியர். இவர், தாம்பரம்—சோமங்கலம் சாலையில் நேற்று முன்தினம் ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வரதராஜபுரம் பகுதியை கடந்த போது, பின்னால் அதிவேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசனை மீட்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.