வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் பிப்.26-ல் கைது செய்தனர். இதையடுத்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
![]()
|
இந்நிலையில் மதுபான கொள்கையில் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு மணீஷ்சிசோடியாவை சிறையில் வைத்து கைது செய்தனர்.டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தினமும் விசாரிக்க கோரினர். இதனை மறுத்து நீதிபதி மணீஷ் சிசோடியா காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.