தார்வாட்-மஹாராஷ்டிராவுக்கு விற்பனை செய்ய, ஏ.பி.எம்.சி.,யில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 ரேஷன் அரிசி மூட்டைகள், 5 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அமர்கோலாவில் உள்ள ஏ.பி.எம்.சி.,யில்சண்முகப்பா பெட்டகேரிக்கு சொந்தமான கடை உள்ளது. இங்கு நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, 450 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து,450 மூட்டைகளையும்,5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சண்முகப்பா பெட்டகேரி, பி.பி.எல்.,கார்டுதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை,10 முதல் 15 ரூபாய்க்கு வாங்கி, மஞ்சுநாத் என்பவருக்கு விற்பனை செய்து வந்தார்.
அத்துடன் இந்தமூட்டைகளை, மஹாராஷ்டிராவுக்கு கிலோ 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்து.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நவ்நகர் ஏ.பி.எம்.சி., போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.