வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுகாத்தி-''அசாமில் செயல்பாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் விரைவில் மூடப்படும்,'' என, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்து உள்ளார்.
![]()
|
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மதரசாக்களை படிப்படியாக குறைக்கும் பணியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக 2020ல் மதரசாக்களை பள்ளிகளாக மாற்றும் சட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.
இதன்படி, மதரசாக்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியதாவது:
அசாமில், ஏற்கனவே 600 மதரசாக்களை மூடி விட்டோம். விரைவில், செயல்பாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களையும் மூடி விடுவோம்.
![]()
|
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எங்களுக்கு மதரசாக்கள் தேவையில்லை; இன்ஜினியர்கள், டாக்டர்கள் தேவை. புதிய இந்தியாவுக்கு மதரசாக்கள் தேவையில்லை.
அதற்கு பதில், பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
அசாமில், தற்போதைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 3,000 மதரசாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement