சென்னை, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் அம்பத்துார் ரயில் நிலையம் முக்கியமானது.
இப்பகுதியில் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், கல்லுாரிகள் அதிகளவில் இருப்பதால், இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், பயணியரின் தேவைக்கு ஏற்ப, படிப்படியாக அடிப்படை வசதியை மேம்படுத்த, சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதியோர், குழந்தைகள் வந்து செல்ல வசதியாக, அம்பத்துார் ரயில் நிலையத்தின் நடைமேடை ஒன்று, இரண்டில் 30 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு 'லிப்ட்'கள் அமைக்கும் பணிகள், சில மாதங்களாக நடந்து வந்தன.
இப்பணிகள் முடிந்துள்ள நிலையில், பயணியரின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதற்கு, பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.