வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: ...
என்.அகத்தியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'ஜனநாயகத்தின் தொட்டில் காங்கிரஸ் தான்; நாட்டில்ஜனநாயகம் வெற்றி பெற்றதற்கு, காங்கிரசே காரணம்' என்று திருவாய் மலர்ந்துள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
![]()
|
'லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், இந்திரா வெற்றி பெற்றது செல்லாது' என, அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை பொறுக்க முடியாமல், நம் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த பெருமைக்குரியவர், அப்போதைய பிரதமர் இந்திரா.
அரசியல் சட்டத்தின், 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி, 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்த பெருமைக்குரியது காங்கிரஸ். ஜனநாயகவாதி என்ற பெயரில், சர்வாதிகாரி போல நடந்து கொண்டவர், முன்னாள் பிரதமர் இந்திரா...
தன்னை பிரதமராக்கிய தலைவர் காமராஜரையே, எமர்ஜன்சி காலத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தப் பெருமைக்குரியவரும் அந்தப் புண்ணியவதியே. லாபத்தில் இயங்கி வந்த தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி, நஷ்டத்தில் இயங்க வைத்த பெருமையும், அவரையே சேரும். இந்த நாட்டில், ஊழலுக்கு முதன்முதலில் வழி வகுத்துக் கொடுத்தவரும் அவரே...!
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த, காங்கிரஸ் கட்சியால் தான், நம் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்கி வளர்கிறது என்று, தமிழக காங்., தலைவர் அழகிரி சொல்வது அப்பட்டமான பொய்.
![]()
|
'பிரதமர் மோடியின் ஆட்சியில், ஜனநாயகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் எல்லாம், பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளன' என்று பேசி, தன் சொந்த நாட்டையே, அன்னிய மண்ணில் இழிவுபடுத்திய பெருமைக்குரியவர் ராகுல்.
இந்தியாவில், ஜனநாயகம் இன்று வரை பெருமையுடன் இருப்பதற்கு காரணம், பிரதமர் மோடி தலைமையிலான சிறப்பான ஆட்சியே.
நாட்டில் மூன்று மாநிலங்களில் மட்டுமே, ஆட்சியில் இருக்கும் காங்., கட்சியால் தான், ஜனநாயகம் வாழ்கிறது என்று, அழகிரிசொல்வது சொத்தை வாதம்; அவரின் இந்த வாதம் மக்களிடம் எடுபடாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement