பத்மாவதி தாயார் கோயில் சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை, தி நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்ட, பத்மாவதி தாயார் கோயில் சம்ப்ரோக்ஷணம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா, அவரது சகோதரி கிரிஜா பாண்டே ஆகியோருக்கு சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கினர்.அந்த இடத்தில் திருப்பதி அடுத்த
 பத்மாவதி தாயார் , கோயில், சம்ப்ரோக்ஷணம், கோலாகலம்

சென்னை: சென்னை, தி நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்ட, பத்மாவதி தாயார் கோயில் சம்ப்ரோக்ஷணம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா, அவரது சகோதரி கிரிஜா பாண்டே ஆகியோருக்கு சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கினர்.


அந்த இடத்தில் திருப்பதி அடுத்த திருச்சானுாரில் இருப்பது போன்று, பத்மாவதி தாயார் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பூமி பூஜையை துவக்கி வைத்தார்.


மன்னர் கால கட்டுமானம்



கோவில் கட்டமைப்பிற்காக தேவஸ்தானம் சார்பில், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கோயில் ராஜகோபுரம் கட்டுவதற்கான செலவு ஒரு கோடி ரூபாய் நிதியை, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ஏற்றார். நன்கொடையாளர்கள், 4 கோடி ரூபாய் கொடுத்தனர்.இதையடுத்து அக்கோவில், மன்னர் கால முறையில் கருங்கற்களால் கட்டப்பட்டது.நேற்று முன்தினம் மூல விக்ரஹ பிரதிஷ்டா மஹோஸ்சவம் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு மூலவர் விமான கலசத்தில் கும்ப நீர் சேர்க்கப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இந்த நிகழ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன் மழை பொழிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 'ஆன்-லைன்' வாயிலாக அருளாசி வழங்கினார். அதைத் தொடர்ந்து பத்மாவதி, ஸ்ரீனிவாசர் கல்யாண உற்சவம் நடந்தது.
இந்த வைபத்தில், விஷாகா ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் பங்கேற்றார்.மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, நடிகை காஞ்சனா, அவரது சகோதரி கிரிஜா பாண்டே, எம்.ஜி.ஆர்., மருத்துவ நிகர்நிலை பல்கலை வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை, திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் தலைமையில், தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர்.


latest tamil news


ரூ.7 கோடி செலவு



தி.நகரில் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு அருகில் பத்மாவதி தாயார் கோயில் வந்தது, சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதம்.திருச்சானுார் பத்மாவதி தயார் கோயில் மறுபிரதியாகவே, இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இக்கோயிலின் மூல விக்ரஹம், திருப்பதியில் செய்யப்பட்டது. பழங்காலத்தில் புராதனக் கோயில் எப்படி அமைக்கப்பட்டதோ, அதே போல கருங்கற்களால் தான் அமைக்கப்பட்டுள்ளது. பாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் என் பங்களிப்பும் உள்ளது என்பது, மனதளவில் பெரும் இன்பத்தை தருகிறது. இதே போல, வெங்கடரமணா சாலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலும், விரிவாக்கம் செய்து நிர்மாணிக்கப்பட உள்ளது.சேகர், திருமலை திருப்பதி தேவஸ்தானதமிழக ஆலோசனைக் குழு தலைவர்


latest tamil news



ஜென்மம் சாபல்யம் அடைந்தது :நடிகை காஞ்சனா உருக்கம்

உலகிலுள்ள பல கோடி அகல் விளக்குகளாக ஜொலிக்கும் பகவானின் ஆத்மாக்களை வர வேற்கிறேன். என் தங்கை கிரிஜா பாண்டே, ஸ்ரீனிவாச பெருமாளின் பக்தை. அடிக்கடி திருமலைக்குச் செல்வார். பல முறை கீழ் திருப்பதியிலிருந்து நடந்தே செல்வார். அந்தக் காலத்தில் நான் பிரபல நடிகையாக இருந்தாலும், அவருடன் திருமலைக்கு செல்வது என் பழக்கம். என் தங்கை, கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். சில காரணங்களால் பெற்றோர் எனக்கு எதுவும் செய்யவில்லை.


latest tamil news


அவர்களின் சொத்துக்கள் எல்லாம் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டது.நான் சம்பாதித்த சொத்துக்கள் கூட பறிபோகும் நிலை வந்தது. இந்த சூழலில், தி.நகர் சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைக்க நான், என் தங்கை, மைத்துனர் மூவரும் ஒருமனதாக தீர்மானித்தோம். பத்மாவதி தாயார் கோயில் இங்கு எழுப்பப்பட்டதில், எங்களின் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது. என்னை, ஒவ்வொரு நொடியும் பெருமாள் தான் காப்பாற்றி வருகிறார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

18-மார்-202319:52:57 IST Report Abuse
ஆரூர் ரங் தாயாருக்கு தனியாக கோயில் அமைக்கும் ஆகமம் தமிழகத்தில் உண்டா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-மார்-202312:35:57 IST Report Abuse
Ramesh Sargam அந்த பத்மாவதி தாயாரின் பாதங்களுக்கு நமஸ்காரம். தமிழக மக்களே, குறிப்பாக தமிழக ஹிந்துக்களே, "பார்த்து, இந்த கோவிலின் மீதும் அந்த திருட்டு திமுகவினரின் கண் விழப்போகிறது"
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-மார்-202303:42:17 IST Report Abuse
D.Ambujavalli வழக்கில் வென்ற சொத்தை ஆண்டவனுக்கே சமர்ப்பிக்கவும் பெரிய மனம் வேண்டும் பக்தர்கள் தாயாரை வணங்கும்போது இவரையும் நினைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X