வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இன்று மனு தாக்கல் துவங்கிய நிலையில், தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனிடம் எடப்பாடி பழனிசாமி, தன் வேட்புமனுவை வழங்கினார்.
கட்சியில் ஏகப்பட்ட பிரச்னை பிரிவுகளுக்கிடையே பொதுச்செயலர் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு: அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி பொதுச் செயலர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த விதிமுறையின்படி பொதுச் செயலர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது.
இன்று காலை வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைகிறது.
![]()
|
வேட்பு மனுக்கள் மார்ச் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை மார்ச் 21ம் தேதி மதியம் 3:00 மணி வரை திரும்ப பெறலாம்.
போட்டி இருந்தால் மார்ச் 26ம் தேதி காலை 8:00 முதல் மாலை 5:00 வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மறுநாள் 27ம் தேதி காலை 9:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பொதுச் செயலர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சியினர் தலைமை அலுவலகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று அதை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
பொதுச் செயலர் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தால் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளிட்ட 84 இடங்களில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement