கன்னியாகுமரி: கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (மார்ச் 18) காலை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். பின், அவர் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார்.

தமிழகம் வருகை தந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். அவர், பாரதமாதா கோவிலில் வழிபட்டு, கேந்திரா நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். ஜனாதிபதி வருகையை ஒட்டி, கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
