பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்: அமைச்சர் தகவல்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (24+ 38) | |
Advertisement
சென்னை: பொதுத்தேர்வு எழுத இரண்டு நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' எனத் தெரிவித்துள்ளார்.நடப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என்பதால் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து
Attendance,Compulsory, public exam,  பொதுத்தேர்வு, வருகைப்பதிவு ,கட்டாயம், அன்பின் மகேஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொதுத்தேர்வு எழுத இரண்டு நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' எனத் தெரிவித்துள்ளார்.



நடப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என்பதால் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் பின், முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் மகேஷ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 'மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு அவர்கள் இடைநின்றதே காரணம்' என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இரண்டு நாட்கள் வந்தாலும், அவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்,'' என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.



latest tamil news

இந்த நிலையில், இந்த கருத்தினை மறுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24+ 38)

19-மார்-202308:35:26 IST Report Abuse
குரு அதெப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு பயம் வருகிறது. நீட் பயம், jee பயம், ஹிந்தி மொழி படிக்க பயம்,. அப்போ ஆசிரியர் பணி என்ன. மாணவனை தேர்வுக்கு தயார் செய்து அனுப்புவது. 15900 ஊதியம் வாங்கும் தனியார் ஆசிரியர்களும் இங்கே உள்ளனர். அவர்களது பள்ளிகளில் இது போன்ற நிகழவுகள் ஏற்பட்டு இருந்தால் உடனே வீட்டிற்க்கு அனுப்பியிருப்பர். இதோ இந்த வாரம் அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த வருடம் தேர்வு முடிந்து விட்டது. உடனே பேருக்கு 10 நாட்கள் விடுமுறை விட்டுவிட்டு ஏப்ரல் தேதி முதல் அடுத்த ஆண்டிற்கான வகுப்பினை தொடங்கி கட்டண வசூல் செய்ய தொடங்கி விட்டனர்.தங்களது பிள்ளைகளுக்கு TC தேவை என்று நினைத்தால் Feb மாதம் இறுதியிலேயே apply செய்ய வேண்டும் என்று புதிய விதிகளை வகுதுள்ளர்கள்.சிபிஎஸ்இ வருடா வருடம் இது கூடாது என்று உத்தரவு பிறபிக்கிறது. ஆனால் அது இங்கே மீறபடுகிறது. முன்பு என்ஜினீயரிங் College ஆரம்பித்து கொள்ளை லாபம் பார்த்தனர்.இப்போது சிபிஎஸ்இ school மூலம் சுரண்டுகின்றனர்.கேட்டால் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்ய கூடாது என்று கம்பு சுற்றி ஊரை ஏமாத்தி வருகிறார்கள்
Rate this:
Cancel
19-மார்-202308:20:01 IST Report Abuse
குரு பள்ளி வாரியாக தரவுகள் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு, அரசின் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எவ்வளவு, சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி மாணவர்கள் எவ்வளவு என்று தரவு வேண்டும். இதில் அரசின் உதவித்தொகை எவ்வளவு என்று கணக்கு காட்ட வேண்டும். Plus 2 என்பதால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுவே ஒன்று முதல் 11வகுப்பு என்றால் சுமார் 2 முதல் 3 லட்சம் மாணவர்கள் என்று கணக்கு வைத்தால் கூட, அரசின் பணம் உதவித்தொகை என்ற பெயரில் எங்கே செல்கிறது,யார் உண்மையான பயனாளிகள் என்று மாண்புமிகு தமிழ்நாடு நீதபதிகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் உச்சநீதிமன்றம் செல்லவும் தயக்கம் கூடாது.2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது இந்த அரசு.அது எந்த பணிக்காக செலவு செய்து உள்ளனர் என்று வெள்ளை அறிக்கையின் வாயிலாக வெளியிட வேண்டும். இதுவே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்றால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பெறும் போராட்டம் நடத்தி ஊடகங்கள் மூலம் அவர்களது கருத்தினை தெரியப்படுத்தி இருப்பார்கள்.தினமலர் மட்டுமே நாள்தோறும் இச்செய்தியை வெளியிட்டு வருகிறது.COVID காலத்தில் 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளி சேர்ந்தனர் என்று கணக்கு காட்டிய கழக கண்மணிகள் இப்போது கணக்கினை காட வேண்டும். ஒரு மாணவனுக்கு சுமார் 50000 என்று வைத்தால் கூட பல கோடி ரூபாய் செலவு செய்து உள்ளனர்.ஆனால் அந்த எங்கே என்றால் தேர்வு பயம் என்று அமைச்சர் கூறுகிறார்.இவரின் வாதத்தை உதாரணமாக எடுத்துக்காட்டி நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூற வேண்டும் .இதுக்கு அனைத்து பள்ளிகளையும் தனியார் மயம் ஆக்கினால் அரசிற்கு ஏற்படும் செலவு பெருமளவு குறையும். தரம் உயரும்.வீணாக மக்களின் வரிப்பணம் விரயம் ஆவது குறையும்.இது குறித்து கூட்டணி கட்சிகள் வாய் திறக்க முடியாமல் திராணியற்ற நிலையில் உள்ளனர்.
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
18-மார்-202322:35:19 IST Report Abuse
 Madhu அடேய் .. மாணவக் கண்மணிகளா பெரியார் வந்துதானேடா நீங்கள் எல்லோரும் பள்ளிக் கூடத்திற்கே போக ஆரம்பித்தீர்கள் என்று எல்லோரும் சொல்றாங்களே... ஸ்கூலுக்கு 'கட்' அடித்து விட்டு சினிமாவுக்கோ, காஃபி ஷாப்புக்கோ, மாலுக்கோ சென்று சுற்றுகிறீர்கள்..... சரி ..போகட்டும்... பரவாயில்லை... ஆனா.. தமிழ் பரீட்சையையும், ஆங்கிலப் பரீட்சையையும் பெரியாரா வந்து உங்களுக்காக எழுதுவாரு? இதே 'லெவலி'ல் நீங்கள் இருக்கிறீர்கள் எனில் ' நீட்'டுக்கும் 'நீட்டாக'ஆப்சென்ட் தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X