75% Attendance is Compulsory to Write Public Exam: Anbin Mahes Info | பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்: அமைச்சர் தகவல்| Dinamalar

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்: அமைச்சர் தகவல்

Updated : மார் 18, 2023 | Added : மார் 18, 2023 | கருத்துகள் (24) | |
சென்னை: பொதுத்தேர்வு எழுத இரண்டு நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' எனத் தெரிவித்துள்ளார்.நடப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என்பதால் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து
75% Attendance is Compulsory to Write Public Exam: Anbin Mahes Info  பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்: அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொதுத்தேர்வு எழுத இரண்டு நாட்கள் வந்தால் போதும் என தான் சொன்ன கருத்தினை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்' எனத் தெரிவித்துள்ளார்.



நடப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என்பதால் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் பின், முதல்வர் உத்தரவின்படி, அமைச்சர் மகேஷ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 'மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு அவர்கள் இடைநின்றதே காரணம்' என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இரண்டு நாட்கள் வந்தாலும், அவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்,'' என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.



latest tamil news

இந்த நிலையில், இந்த கருத்தினை மறுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆண்டுக்கு 3 நாட்கள் வந்தால் போதும் என வெளியான தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X