திருநெல்வேலி: வரும் தேர்தலில் அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு நான் எந்தவித விளக்கமும் சொல்ல முடியாது.
அதிமுக.,வாக இருந்தாலும், திமுக.,வாக இருந்தாலும், காங்கிரசாக, பா.ஜ.,கவாக இருந்தாலும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்தித்துள்ளனர். இது கடந்த கால வரலாறு. தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.,வின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement