நகைக்கடை ஏஜென்டை கடத்தி ரூ.2 கோடி பணம், தங்கம் கொள்ளை: 6 பேர் கைது

Added : மார் 18, 2023 | |
Advertisement
காரைக்குடி: காரைக்குடியில் நகைக்கடை ஏஜென்டை கடத்தி ரூ.2.01 கோடி பணம், 1.471 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 பேரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர்.காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 43. நகை ஏஜென்டான இவர், சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் ஏறி கடந்த மார்ச் 12ம் தேதி அதிகாலை காரைக்குடி கழனிவாசலில் ரூ.2.01 கோடி பணம் மற்றும் 1.471 கிலோ தங்க
Kidnap, Jewelery, Money, Arrest, நகைக்கடை ஏஜென்ட், கடத்தல், நகை, பணம், கைது, பறிமுதல்

காரைக்குடி: காரைக்குடியில் நகைக்கடை ஏஜென்டை கடத்தி ரூ.2.01 கோடி பணம், 1.471 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 6 பேரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர்.


காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 43. நகை ஏஜென்டான இவர், சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் ஏறி கடந்த மார்ச் 12ம் தேதி அதிகாலை காரைக்குடி கழனிவாசலில் ரூ.2.01 கோடி பணம் மற்றும் 1.471 கிலோ தங்க நகையுடன் இறங்கியுள்ளார். காரில் வந்த மர்ம நபர்கள் தங்களை போலீசார் எனக்கூறி ரவிச்சந்திரனை காரில் கடத்திச் சென்று பணம் மற்றும் நகையை பறித்துக் கொண்டு இறக்கிவிட்டு சென்றனர்.


இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி., செல்வராஜ் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் டிரைவர் ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம், காரைக்குடி உதவி எஸ்.பி.,ஸ்டாலின் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.


விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை நாகேந்திரன் என்ற சூர்யா 57, சதீஷ் 36, சாமுவேல் 36, பால்ராஜ் 55, பெருமாள் 51, விஜயகுமார் 52 என்பது தெரியவந்தது. கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட நாகேந்திரன் என்ற சூர்யா, சதீஷ், சாமுவேல் ஆகிய மூவரும் ஊர்க்காவல் படையில் பணியாற்றியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து, பணம், நகை மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X