வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.

குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ளார். இதற்காக குஜராத்துக்கு வருகை தந்த அவருக்கு, மக்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து காந்திநகரில் நடந்த 49-வது பால் பண்ணை ஆலையின் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: சுதந்திரம் பெற்ற பிறகு, பால் உற்பத்தியானது 10 மடங்காக பெருகி உள்ளது. நமது பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 12.6 கோடி லிட்டர். இது உலக அளவில் அதிகம்.

இந்திய பொருளாதாரத்தில் பால் பண்ணை பிரிவானது ஒரு முக்கிய அம்சம் வகிப்பதுடன், ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு பங்காற்றி உள்ளது. இந்த பால் பண்ணை அமைப்புடன் 45 கோடி மக்கள் தொடர்பில் உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காக பால்பண்னை துறை அதிகளவு உழைத்துள்ளது. இதில் விவசாயிகளின் பங்கு அதிகம். இவ்வாறு அவர் பேசினார்.