தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரியை சேர்ந்த செல்வம்,65, முருகன்,55,. கூலி தொழிலாளியான இருவரும், சில நாட்களாக, எட்டு வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் போது, அந்த சிறுமியின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். கும்பகோணம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.