மாதவிடாய் நாட்களில் சோர்வு, வலி என உடல் ரீதியாக தொல்லைகளும், எரிச்சல், கோபம் என மனரீதியான மாற்றங்களுமாக பெண்கள் சந்திக்கும் நெருக்கடியை அவர்களால் மட்டுமே உணர முடியும். இந்த சூழ்நிலையில் பெண்களின் மாதவிடாய் வழியையும் சிரமத்தையும் தணிக்க உதவும் ஹெர்பல் டீ பானங்கள் பற்றிப் பார்ப்போம்.
லவங்கப்பட்டை டீ
கார்ப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் லவங்கம் பல நற்குணங்களை கொண்டுள்ளது. உணவில் லவங்கம் சேர்ப்பதால் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பொறுத்துக்கொள்ள முடியாத வலி இருந்தால், அதன் தீவிரத்தை குறைக்க லவங்க டீ உதவும்.
![]()
|
எப்போதும் போல தண்ணீரை கொதிக்க விட்டு, லவங்கப்பட்டை பொடியை சிறிது சேர்த்து, உங்களுக்கு விருப்பப்பட்டால் சிறிது இஞ்சி துருவி சேர்த்து, பிறகு வடிகட்டி குடிக்கலாம். இஞ்சி சேர்ப்பது வழியை மேலும் குறைக்கும்.
ஓமம் டீ
![]()
|
ஓமத்தில் மினரல்கள், பிளேவனாய்டுகள், பாலி ஃபீனால்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் உள்ளதால் மாதவிடாய் வலியை குறைக்க உதவும். ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து. அதில் ஓம இலைகளை போட்டு 10-15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் வடிகட்டி குடிக்க வலி குறைவதை உணரலாம்.
ரெட் ராஸ்பெர்ரி டீ
![]()
|