அமெரிக்காவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்புள்ள டெபாசிட்களை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வைத்துள்ளன என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக் மாகாணம் எனப்படும் கலிபோர்னியாவில் சிலிக்கான் வேலி வங்கி (SVB) செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பெரும்பாலும் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்களுக்கு கடனளித்தது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் இந்நிறுவனம் யு.எஸ்., டிரஷரீஸ் மற்றும் மார்ட்கேஜ் ஆதரவு கொண்ட பத்திரங்களில் செய்திருந்த முதலீடுகள் பல ஆயிரம் கோடி சரிவைக் கண்டது. மக்கள் அந்த சமயத்தில் ஒரே நாளில் சுமார் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட்டுகளை திரும்பப் பெறத் தொடங்கினர். இதனால் முதலீடுகளை நஷ்டத்தில் விற்று பணத்தை திரட்டியது. வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. பங்குச்சந்தையில் இவ்வங்கியின் பங்குகள் ஒரே நாளில் 70% சரிந்தன. கலிபோர்னியா வங்கி கட்டுப்பாட்டாளர்கள் மார்ச் 10 அன்று சிலிக்கான் வேலி வங்கியை (SVB) மூடிவிட்டனர்.
![]()
|
இந்த வாரம் 460-க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்தோரை சந்தித்தேன். அதில் எஸ்.வி.பி., மூடலால் பாதிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களும் அடங்கும். அவர்களின் பரிந்துரைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்துள்ளேன். எஸ்.வி.பி.,யில் அவர்கள் வைத்துள்ள டெபாசிட்டுகளை பிணையமாகப் பயன்படுத்தி கடன் வழங்கலாம் என்பதும் அதில் ஒன்று. சிக்கலான எல்லைக் கடந்த அமெரிக்க வங்கி முறையைச் சார்ந்து இருப்பதை விட, இந்திய வங்கி முறைக்கு ஸ்டார்ட்அப்களை எவ்வாறு மாற்றுவது என திட்டமிடுகிறோம். இவ்வாறு கூறினார்.