சென்னை:நாளை (19 ம் தேதி) முதல் மகளிர் போலீசாருக்கு காலை 8 மணி முதல் ரோல் காலிங் நடத்தப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறி உள்ளாா்
தமிழக காவல் துறையில், பெண் போலீசார் நியமனம் செய்து, 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பெண் போலீசார், குடும்பத் தலைவியாகவும், கடினமான காவல் துறையிலும் பணியாற்றுவதால், இனி இவர்கள், 'ரோல் கால்' எனும் காவலர் வருகை அணிவகுப்புக்கு, காலை 7:00 மணிக்கு வர வேண்டாம்; 8:00 மணிக்கு வந்தால் போதும். என அறிவித்தார்.
இதனையடுத்து சென்னை காவல் துறை அதிகாரி சங்கர் ஜிவால் கூறுகையில் முதல்வர் அறிவித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது சென்னை காவல் துறை. மேலும் நாளை (19 ம் தேதி) முதல் மகளிர் போலீசாருக்கு காலை 8 மணி முதல் ரோல் காலிங் நடத்தப்படும் என தெரிவித்தார்.