புதுடில்லி: 100-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டுள்ளது.இந்த அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்தாண்டு தடை விதித்துள்ள நிலையில், இன்று பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த 105 பேர் மீது என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.