வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க, பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை கட்சி தலைமை அறிவித்தது. இதன்படி இன்று (18ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (18ம் தேதி) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடித விவரம்:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. கடந்தாண்டு ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு தொடர்பாக தீர்மானங்கள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பொதுத்தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம்.
![]()
|
பொதுத்தேர்தல் செல்லாது என அறிவித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இந்தமனு மீது நாளை (மார்ச்.19) விசாரணைக்கு வருகிறது.
விதிகளின்படி தேர்தல்
இது குறித்து ஜெயக்குமார் கூறியது, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. உரிய பாதுகாப்பு வழங்கிட கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
Advertisement