மார்ச் 19, 1933
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகஸ்தீஸ்வரத்தில், தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர், குமரி அனந்தன் என்ற, அனந்த கிருஷ்ணன்.
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவர், காங்கிரசில் இணைந்து, 1977ல், காமராஜரின் தொகுதியான நாகர்கோவிலில் போட்டியிட்டு எம்.பி.,யாகி, பார்லிமென்டில் தமிழில் பேசவும், தமிழில் தந்தி, காசோலை பயன்பாட்டுக்கும் அனுமதி பெற்றார்.
இதன்பின், 1980ல் திருவொற்றியூர், 1984ல் ராதாபுரம், 1989, 1991ல் சாத்தான்குளம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.,வானார். 1996ல், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1996, 1998 தேர்தல்களில் தோல்வியடைந்தார். 'பனைமரம் பாதுகாப்பு, தர்மபுரியில் பாரதமாதாவுக்கு கோவில், நதிகளை இணைப்பு' போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பலமுறை பாதயாத்திரை சென்றுள்ளார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை
யின் தந்தை என்பதுடன், சிறந்த எழுத்தாளர், இலக்கிய பேச்சாளர் என்ற பன்முகம் உடைய மூத்த அரசியல்வாதியின், 90வது பிறந்த தினம் இன்று!
Advertisement