வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
தஞ்சாவூர்: இ.பி.எஸ்., நிச்சயமாக அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக வரவே முடியாது என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில்., அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., அணி சார்பில், செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது; அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம், நியாயம் எங்களது பக்கம் உள்ளது. சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. எனவே, இன்னமும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., தான் உள்ளார். எனவே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.
தினகரனாக இருந்தாலும், சசிகலாவாக இருந்தாலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அ.தி.மு.க.,வை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இவை கூடிய சீக்கிரத்தில் நடக்கும். அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக நிச்சயமாக இ.பி.எஸ்.,வரவே முடியாது. பொதுச்செயலாளர் தேர்வு என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், இங்கு எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.
அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வருகிற தேர்தலில் இருக்காது என அண்ணாமலை கூறியுள்ள கருத்து அவரது கருத்து தான், பா.ஜ.,வின் மேலிட தலைவர்களின் கருத்து அல்ல. அண்ணாமலை கருத்துக்கல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்ததார்.
நான் நினைத்து இருந்தால்
தி.மு.க.,வால் தான் புறக்கணித்த போது, எம்.ஜி.ஆர்., அ,தி.மு.க.,வை துவங்கிய போது, தொண்டர்களால் பொது செயலாளர் தேர்வு செய்ய, தொண்டன் ஒருவர் தலைவனாக வர வேண்டும் என்று சட்டவிதியை கொண்டு வந்தார். அந்த சட்டவிதியை யாராலும், எந்த நிலையிலும் மாற்ற முடியாது. இன்னும் 50 ஆண்டுகள் கடந்தாலும், இதை மாற்ற முடியாது.
பின்னர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என வந்த போது, ஜெயலிலதா தான் நிரந்தர பொது செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரஸ்வதி சபதம் படத்தில் வரும் ஒரு காட்சியில் யானை நடிகைக்கு மாலை போட்டு பிச்சைக்காரியை ராணியாக மாற்றும். தரையில் தவிழ்ந்து பதவி பெற்ற பழனிசாமி. இந்த தகுதி நன்றி, விசுவாசம் இல்லாமல், பதவிக்கு வந்தவுடன் பைத்தியம் பிடித்த கிறுக்கன் போல நடந்துக்கொண்டு இருக்கிறார்.
பழனிசாமி எனக்கு நல்ல நண்பர். நான் அவரை குறைச்சொல்லுகிறேன் என நினைக்க வேண்டாம். அவரை உருவாக்கிவரை சிறையில் இருந்து வரக்கூடாது என நினைத்த அர்ப்ப புத்திக்கொண்டவர் தான் பழனிசாமி.
நான் நினைத்து இருந்தால், அன்றைக்கு பழனிசாமி முதல்வர் கிடையாது. இந்த கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். சின்னாபின்னமாகி விட கூடாது என்பதற்காக தான், நாங்கள் பழனிசாமி முதல்வராக வர சம்மதம் தெரிவித்தோம். என்றார்.
Advertisement