புதுடில்லி : வரும் ஜூனில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அரசு சார்பில் அதிபர் பைடன் விருந்தளித்து கவுரவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. வரும் ஜூனில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்லலாம் என தெரிகிறது.
இந்த பயணத்தின் போது, அமெரிக்க அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் விருந்தளித்து கவுரவிக்கவுள்ளதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு ஜூனில் நடக்காவிட்டாலும், ஓரிரு மாதங்கள் முன் பின் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
![]()
|
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதற்கு, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு உதவும் என, வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும், 'குவாட்' அமைப்பின் மாநாடு, வரும் மே மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.
அப்போது, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் பைடனும் சந்தித்து பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement