விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் வீடிழந்தவருக்கு பா.ஜ.,வினர் நிவாரண உதவி வழங்கினர்.
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில்ராணி பரசுராமன் என்பவரது வீடு எரிந்துநாசமானது.
நேற்று விழுப்புரம் தெற்கு பா.ஜ., தலைவர் கலிவரதன், நேரில் சென்று பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, காய்கறி, மளிகை, துணி மற்றும் சொந்தநிதியாக 5,000 ரூபாய் வழங்கினார்.
பனையபுரம் ஊராட்சி துணைத் தலைவர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் தங்கம், ஒன்றிய தலைவர் வெங்கடகிருஷ்ணன் உட்பட கட்சிநிர்வாகிகள் பலர்பங்கேற்றனர்.
Advertisement