விழுப்புரம்: தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே நடந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். கணக்காயர் களத்தொழிலாளர் சங்க செயலாளர் சண்முகசுந்தரம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில், மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சி.ஐ.டி.யூ., திட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார்.