மாமல்லபுரம், 'எப்.சி., மெட்ராஸ்' என்ற கால்பந்து கிளப் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்ல புரம் அடுத்த, வடகடம்பாடியில், சர்வதேச தர கால்பந்து அகாடமியை, நேற்று துவக்கியுள்ளது.
இந்திய மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்புகளின் பரிந்துரை அமைப்பில், தர நிலைகளில், 23 ஏக்கர் பரப்பில், அகாடமி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரவிலும் விளையாடும் வகையில், பிரகாச விளக்குகளுடன், பார்வை யாளர் மாடத்துடன் கிழக்காசியாவின் முதலாவது ஹைபிரிட் கால்பந்து மைதானமாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் வகுப்பறைகள், கருத்தரங்க கூடம், உடல் தகுதி வலுவிற்கான உடற்பயிற்சி மையம், மருத்துவ மற்றும் காய சிகிச்சை மையங்கள், உள்ளரங்க மைதானம், விடுதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. 130 பேர் தங்கி பயிற்சி பெறலாம்.
கால்பந்தில் திறனும், ஆர்வமும் உடைய இளம் வீரர்களுக்கு, 'எப்.சி., மெட்ராஸ்' நிறுவனம், கல்வி உதவித்தொகை அளிக்கிறது.
இத்தகவலை அகாடமியின் விளையாட்டுகள் மற்றும் நிர்வாக பிரிவு இயக்குனர் தனஞ்செய் தெரிவித்தார்.