நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் நகரில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த பிரதான சாலையான, மேட்டு தெரு முதல், பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சாலை வரை, சாலையின் இருபுறங்களிலும், நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களும், கார்களும், ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் நடைபாதையில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சாலையை கடப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நடைபாதையின் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.
-தி.சே அறிவழகன், திருப்புலிவனம்.
அடுக்குமாடி வளாகத்தில் குப்பை அகற்றப்படுமா?
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாத்துார் ஊராட்சியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த குடியிருப்பு வளாகத்தில் உணவகம், காய்கறி, மளிகை உள்ளிட்ட 30 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வீணாகும் உணவு கழிவு , டம்ளர், வாட்டர் பாட்டில் ஆகியவை அதே பகுதியில் தனியார் பள்ளி மதில் சுவர் அருகே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சி.ராம், மாத்துார்.