சென்னை, நங்கநல்லுார் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் 4,656 சதுர மீட்டர் பரப்பு இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, வாகன நிறுத்தும் இடமாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
நேற்று திறக்கப்பட்ட இந்நிறுத்தம், இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இங்கு, 1,000 பைக், 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.
l ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலைய கார் நிறுத்தும் பகுதி புதுப்பிக்கப்பட இருப்பதால், வரும் 24 முதல் மூன்று மாதங்களுக்கு செயல்படாது. இதற்கு மாற்றாக, பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம், நங்கநல்லுார் விரிவாக்க இடத்தில் கார்களை நிறுத்தி கொள்ளலாம்.