வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை,-மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை, நடிகர் ரஜினி நேற்று சந்தித்துப் பேசினார்.
![]()
|
மஹாராஷ்டிராவில் கடந்தாண்டு ஜூனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் அடங்கிய 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி அரசு கவிழ்ந்தது.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்திக் குழுவினர், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தனர்.
தற்போது, மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வரும் உத்தவ் தாக்கரேவை, மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில், நடிகர் ரஜினி நேற்று சந்தித்தார்.
![]()
|
'மரியாதை நிமித்தமாக நடந்தது' என்று சொல்லப்பட்ட இச்சந்திப்பின்போது, உத்தவின் மனைவி, மற்றும் இரு மகன்கள் உடனிருந்தனர். முன்னதாக, தன் இல்லத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினியை, பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் வரவேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சரும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே தன் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு கூறுகையில், 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.
'இதில் அரசியல் குறித்து பேசவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement