காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் தி.ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார். பள்ளி துணைத்தலைவர் ஜோன்ஆர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினரை பள்ளி துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் அறிமுகம் செய்து வைத்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கலந்துகொண்டு நீட் தேர்வில் தமிழக மற்றும் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர் தமிழ்ச்செல்வன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பயாஸ் ஜமால்,எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜோதி ரோஷினி, இரண்டாம் இடம் பிடித்த மாணவர் ஆர்கோ முகர்ஜி மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சயின்ஸ்பீம் தேர்வில் வகுப்பு வாரியாக முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் என 900 விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது ; இந்த விழாவை பார்க்கும் போது என்னுடைய பள்ளி கால நினைவுகள் நினைவுக்கு வருகிறது. நாம் பள்ளியில் படித்து விட்டு வெளியே வந்த பின்பு நாம் பள்ளியில் நடந்தவற்றை நினைவு கூறுவோம். நீங்கள் படிக்கும் போதே உங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே அவர்களை நேசிக்க வேண்டும்.
நான் வேலூரில் நுழையும்போது சன்பீம் பள்ளி மாணவர் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற விளம்பரத்தை பார்த்த போது பள்ளியின் மீது மரியாதை ஏற்பட்டது. நான் பார்த்த சிறந்த பள்ளிகளில் சன்பீம் பள்ளியும் ஒன்று. பள்ளி வளாகம் சிறப்பாக உள்ளது. நாம் படிக்கும் காலத்தில் பள்ளி வளாகம், உள்கட்டமைப்பும் முக்கியம். நாம் படிக்கும் பள்ளி நமக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது .மற்ற பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காத கட்டமைப்பு வசதிகள் உங்களுக்கு கிடைத்துள்ளது.
எல்லா மாணவர்களுக்கும் உங்களை போல வாய்ப்பு கிடைக்காது. நீங்கள் அந்த வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். அதற்கு உங்கள் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பேர் வக்கீல், நீதிபதியாக வருவீர்கள் என தெரியவில்லை. வருகிற 5 ஆண்டுகளில் வக்கீல் தொழில் முதன்மையான தொழிலாக இருக்கும். இவர் அவர் பேசினார்.இல்லத்து அணியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மெட்ரிக் பள்ளியில் மார்வல் அணியும், சி.பி.எஸ்.இ. பள்ளியில் நேதாஜி, பட்டேல் அணிகளும் பரிசு பெற்றது.முடிவில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ரத்தீஷ் நன்றி கூறினார்.