வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாசிக்,-''ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன், 'ஸ்மார்ட் வில்லேஜ்' என்ற திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்,'' என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.
![]()
|
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நந்துார் ஷிங்கோட்டில், மறைந்த பா.ஜ., மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டேவின் சிலை மற்றும் நினைவிடத்தை, நேற்று, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்து பேசியதாவது:
விவசாயிகளுக்கு நீதி வழங்குவதில், கோபிநாத் முண்டே முன்னோடியாக இருந்தார்.
![]()
|
கிருஷ்ணா பள்ளத்தாக்கு, தாபி பாசனம் மற்றும் விதர்பா நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற திட்டங்களின் வாயிலாக விவசாயிகளுக்காக அவர் கடுமையாக உழைத்தார்.
அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, விவசாயிகளின் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நாட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன், ஸ்மார்ட் வில்லேஜ் என்ற திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement