வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லியில் இருந்து செயல்படும் சில ஹிந்தி மற்றும் ஆங்கில சேனல்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளன. வட மாநிலங்களான பீஹார், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உட்பட ஹிந்தி பேசும் எட்டு மாநில மக்களிடம் இந்த 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது.

'வரும் 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பீர்கள்; யார் பிரதமராக வர வேண்டும் என விரும்புகிறீர்கள்' என பல கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.
இதில், 80 சதவீத மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்; அவருக்குத்தான் எங்கள் ஓட்டு என கருத்து தெரிவித்துள்ளனராம். பா.ஜ., அரசின் செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன; மோடி எதிர்ப்பு அலை வீசவில்லை; காங்கிரசுக்கு சுத்தமாக ஆதரவே இல்லை என்கிறது சர்வே.

இந்த எட்டு மாநிலங்களில், 290 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மோடிக்கு உள்ள 80 சதவீத ஆதரவை வைத்து பார்த்தால், 250 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு சொல்கிறதாம். இந்த கருத்துக் கணிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.