வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமீபத்தில் ஹரியானாவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய கூட்டம் நடைபெற்றது. இதில், தென்னகத்தின் இரண்டு மாநிலங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டதாம். இந்த மாநிலங்கள் தமிழகமும், தெலுங்கானாவும் தான்.
![]()
|
இங்கே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும்; பா.ஜ., வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாம்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பல அமைப்புகள் உள்ளன. இவற்றில் மூன்று அமைப்புகளை தமிழகத்திலும், தெலுங்கானாவிலும் களமிறக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 'தமிழகம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்; தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பேசினாராம்.
![]()
|
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பாத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு கை கொடுக்கும் என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement