வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடியதாகவும், அவரது ஆதரவாளர்கள் 78 பேர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், 'வரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தீவிரவாத போதகராக உள்ள இவர், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் உள்ளார்.
![]()
|
நேற்று ஜலந்தர் மாவட்டம் ஷாகோட் பகுதியில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அம்ரித் பாலை, போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். அப்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடினார். அவரை பஞ்சாப் போலீசார் தேடி வருகின்றனர்.
நடந்த சம்பவத்தை தொடர்ந்து , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுதும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அம்ரித்பால், போராட்டத்தின் போது போலீஸ் பிடியிலிலிருந்து இரு சக்கர வாகனம் மூலம் தப்பியோடியதாகவும், துபாய் தப்பிசெல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜலாந்தர் போலீஸ் கமிஷனர் குல்தீப்சிங் இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, அம்ரித் பால் சிங் பக்கத்து மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம். தற்போது அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளோம். அவரது ஆதரவாளர்கள் 78 பேரை கைது செய்து விசாரிக்கிறோம் என்றார்.