Searching for Tamil Where will happen! | தமிழ் எங்கே என தேடும் நிலை உருவாகும்!| Dinamalar

'தமிழ் எங்கே' என தேடும் நிலை உருவாகும்!

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (39) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: ...பி.சுரேஷ், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இதில், முதல் தேர்வாக தமிழ் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு எழுத, பள்ளிகளில் படித்த, 8.51 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக, 9,000 பேரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: ...


பி.சுரேஷ், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இதில், முதல் தேர்வாக தமிழ் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு எழுத, பள்ளிகளில் படித்த, 8.51 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக, 9,000 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தனித் தேர்வர்கள், 1,000 பேர் உட்பட,50 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது.



latest tamil news

ஆங்கில தேர்வு எழுத வராமல், 'ஆப்சென்ட்' ஆயினர் என்றாலோ, கணக்கு தேர்வுக்கு, 'டிமிக்கி' கொடுத்தாலோ அதில் அர்த்தம் உண்டு; ஆனால், நம் தாய்மொழியான தமிழ் மொழி தேர்வையே எழுத மறுத்து, ஆப்சென்ட்டாகி இருக்கின்றனர் என்றால், அதை ஆட்சியாளர்கள், அத்தனை சுலபமாக கடந்து விடக்கூடாது.


ஏனெனில், தமிழகத்தில் நடந்து வருவது, 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்று மூச்சுக்கு மூச்சு முழங்கி வரும் கழகத்தினரின் ஆட்சி. அரசு கட்டடங்களின் உச்சியில், 'தமிழ் வாழ்க' என்று, 'நியான்' விளக்கில் ஒளிர வைத்திருப்பவர்களின் ஆட்சி.


அதேநேரத்தில், இப்படி தமிழ் வாழ்க என்று, கட்டடங்களின் உச்சியில், 'போர்டு' மாட்டி வைத்திருப்பவர்களில், ஒருவரின் பெயர் கூட தமிழில் கிடையாது; மேலும், அவர்களின் குடும்பத்தினர், வாரிசுகள் நடத்தும் வியாபார நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இல்லை. இப்போது, 'லேட்டஸ்டாக' ஒரு அரசியல் தலைவர், தமிழகத்தில் காணாமல் போயிருக்கும் தமிழைத் தேடி புறப்பட்டிருக்கிறார் என்பது வேறு விஷயம்.


கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில், 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்தாண்டு, பிளஸ் 2 தமிழ்பாடத் தேர்வை, 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல், ஆப்சென்ட்டாகி உள்ளனர்.


இதிலிருந்தே, பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லி சொல்லியே, தமிழக மக்களை சிந்திக்கவே விடாமல் வைத்திருக்கும், தி.மு.க.,வினர் ஆட்சியில், தமிழ் மொழியின் நிலை, எந்த அளவுக்கு மோசமாகி வருகிறது என்பதை அறியலாம்.


latest tamil news

'சொல்லவும் கூடுவதில்லை; -அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும்' என, தமிழ் மக்களை நோக்கி, தமிழ்த்தாய் வருந்துவது போல பாடினார், பாரதியார். சாகாவரம் பெற்ற இந்த வரிகள், தற்போது தமிழை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கழகங்களுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும்.


இனியாவது ஆட்சியாளர்கள் விழித்து, தமிழை வளர்க்க முற்படாவிட்டால், தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகவே போய் விடும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், தி.மு.க.,வினரின் புளுகையும், புளுகு மூட்டைகளையும் நம்பவும், மயங்கி கிடக்கவும், ஒரு கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அந்தக் கூட்டமும் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ் எங்கே என்று தேடும் நிலை உருவாகி விடும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X