புதுச்சேரி: ஆரோவிலில் நடைபெற்று வரும் குதிரையேற்ற போட்டியின் நிறைவு விழா இன்று நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த ஆரோவிலில் உள்ள 'ரெட் எர்த்' குதிரையேற்ற பயிற்சி பள்ளி வளாகத்தில், 23வது தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடந்த லீக் போட்டியில், 80- 90 செ.மீ., மற்றும் 100 -105 செ.மீ., ஷோ ஜம்பிங், 90 - 100 செ.மீ., ஷோ ஜம்பிங் ரிலே, இடைநிலை, சிறப்பு நிலை டிரசேஜ் பிரி ஸ்டைல் போட்டிகள் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட வீரர்கள் குதிரைகளோடு பங்கேற்றனர்.
போட்டியின் நிறைவு விழா இன்று நடக்கிறது. அதில், சிறந்த குதிரையேற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கபடுகிறது.