கோபத்தில் துணை ஜனாதிபதி

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி: பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வழக்கம் போல பிரச்னைகளை எழுப்பி, இரு சபைகளையும் முடக்கி வருகின்றன. 'ராகுல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளார்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ.,வும் அமளியில் ஈடுபட்டுள்ளது. இப்படி இரண்டு தரப்பும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வழக்கம் போல பிரச்னைகளை எழுப்பி, இரு சபைகளையும் முடக்கி வருகின்றன. 'ராகுல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளார்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ.,வும் அமளியில் ஈடுபட்டுள்ளது.



latest tamil news


இப்படி இரண்டு தரப்பும் கோதாவில் இறங்கியுள்ளதால், பார்லி., முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் கோபத்தில் உள்ளார். ராஜ்யசபா நடக்காதது ஒரு புறம் இருக்க, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபையின் மத்திய பகுதிக்கு வந்து இவருடைய மேஜைக்கு அருகில் கோஷம் போடுவது கோபத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது ஜக்தீப் கடும் கோபத்தில் உள்ளார்.


latest tamil news


'எப்போது பார்த்தாலும் என் சீட்டிற்கு அருகே வந்து ஒழிக, ஒழிக என கோஷம் போடுகிறீர்களே; ஒரு நாளாவது இப்படி கூச்சலிடாமல் இருந்தது உண்டா' என ஒரு சீனியர் தி.மு.க., --- எம்.பி.,யைப் பார்த்து ஜக்தீப் கேட்டாராம். அந்த எம்.பி., பதில் எதுவும் சொல்லவில்லையாம்.

உடனே அந்த எம்.பி.,யிடம், 'உங்களுடைய பதவிக்காலம் எப்போது முடிகிறது' என ஜக்தீப் கேட்க, இதற்கு தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், துணை ஜனாதிபதியோ இவர்கள் மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
19-மார்-202313:16:32 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN இந்த திராவிட கும்பல்களுக்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை போட்டுக்கொண்டனர், தமிழகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட MP கலால் கடந்த 10 வருடங்கள் தமிழ வளர்ச்சிக்கும் தமிழ மக்களுக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை இனியும் இந்த திராவிட கட்சிகளை தேர்தெடுத்தால் தமிழகம் வளர்ச்சி பின்னடைவை சந்திக்கும், இனிமேல் தமிழ மக்கள் புத்திசாலி தனமாக இனி நடந்து கொள்ள வேண்டும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-மார்-202312:33:26 IST Report Abuse
sankaranarayanan நோ வொர்க் நோ பெ என்ற சட்டம் வெறும் அரசாங்க வேலையாளர்களுக்கு மட்டுந்தானா இவர்களுக்கு பொருன்தாதா? விமானத்தில் வருவதற்கு முதல் வகுப்பு உத்திரவாதம் தலைநகரில் எல்லா வசதிகளுடன் ஏசி பங்களா வாசம் போராதத்திற்கு மற்றுமொரு பங்களா வைத்துக்கொள்ள அனுமதி. ஊர் சுத்த ஏசி கார் எல்லாம் இலவசம் சாப்பாடு டிபன் எல்லாம் இலவசம் இன்னும் என்னன்னமோ இலவசாலிஸ்டில் இருக்கின்றன ஆனால் பார்லிமென்டில் அவை சபையில் கூச்சல் கும்மாளம் வெளிநடப்பு. காந்தி சிலைமுன் நன்றாக சாப்பிட்டுவிட்டு சாகும்வரை இல்லை இல்லை சற்று நேரம் உண்ணாவிரதம் என்று போர்வை மாற்றப்படும். பிறகு ஊர் சுத்தல் இதுதானய்யா நடப்பு. மக்களே கவனியுங்கள் இவர்களை திரும்ப திரும்ப இனி தேர்ந்தெடுத்து பாரிலிமென்டர்டிற்கு அனுப்பவே அனுப்பாதிர்கள். மக்கள் பணத்தை வீணாக்கும் மாவீரர்கள்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
19-மார்-202311:16:50 IST Report Abuse
Barakat Ali சபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே நிறுத்த அதிகாரம் இருக்கிறதே? கோபத்தால் தன்னைத் தானே அடித்துக் கொள்ளப்போகிறார் ... பார்த்து ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X