வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வழக்கம் போல பிரச்னைகளை எழுப்பி, இரு சபைகளையும் முடக்கி வருகின்றன. 'ராகுல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளார்; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என பா.ஜ.,வும் அமளியில் ஈடுபட்டுள்ளது.
![]()
|
இப்படி இரண்டு தரப்பும் கோதாவில் இறங்கியுள்ளதால், பார்லி., முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடும் கோபத்தில் உள்ளார். ராஜ்யசபா நடக்காதது ஒரு புறம் இருக்க, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபையின் மத்திய பகுதிக்கு வந்து இவருடைய மேஜைக்கு அருகில் கோஷம் போடுவது கோபத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது ஜக்தீப் கடும் கோபத்தில் உள்ளார்.
![]()
|
'எப்போது பார்த்தாலும் என் சீட்டிற்கு அருகே வந்து ஒழிக, ஒழிக என கோஷம் போடுகிறீர்களே; ஒரு நாளாவது இப்படி கூச்சலிடாமல் இருந்தது உண்டா' என ஒரு சீனியர் தி.மு.க., --- எம்.பி.,யைப் பார்த்து ஜக்தீப் கேட்டாராம். அந்த எம்.பி., பதில் எதுவும் சொல்லவில்லையாம்.
உடனே அந்த எம்.பி.,யிடம், 'உங்களுடைய பதவிக்காலம் எப்போது முடிகிறது' என ஜக்தீப் கேட்க, இதற்கு தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், துணை ஜனாதிபதியோ இவர்கள் மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement