தேனி, : தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சங்கத் தலைவர் நம்பெருமாள் தலைமை வகித்தார்.
சங்க பொதுச்செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் அறிக்கை வாசித்தார். சென்னை அல்டிமெட்ரிக் நிறுவனத்தின் பொறியியல் பிரிவுத் தலைவர் மணிவண்ணன் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்,' மாணவர்கள் தங்களது துறையில் சிறந்து விளங்கிட வேண்டும். அறிவை மெருகேற்றுவதுடன், புதிய தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்', என்றார்.
மின்னியல் துறையில் பல்கலை. அளவில் 4ம் இடம் பிடித்த மாணவர் கணேசனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.