தேனி, : தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் உலக மகளிர் தின விழா, பைந்தமிழ் விழா, சாதனைப் பெண்மணி விருது வழங்கும் விழா - நடந்தது.
உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் பியூலாராஜினி வரவேற்றார். கலை அறிவியல், பொறியியல் கல்லுாரிகளில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு சாதனைப் பெண்மணி விருதுகள் வழங்கி உறவின்முறை நிர்வாகிகள் வழங்கி கவுரவப்படுத்தினர்.
கணிதவியல் துறை 2ம் ஆண்டு மாணவி அறிமுகம் செய்தார். பேச்சாளர் மதுரை பிரியங்கா, கல்லுாரி செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா, பொறியியல் கல்லுாரி முதல்வர் மதலைசுந்தரம் பேசினர். கணிதவியல் துறை உதவி பேராசிரியர் சவுந்திரராஜம் நன்றி தெரிவித்தார்.