தேனி, : வீரபாண்டி கிழக்குத் தெரு மாரிச்சாமி 38. கூலிக்கு டிராக்டர் டிரைவராக வேலை செய்தார். இவருடைய மனைவி காமுத்தாய்35. இவர்களுக்கு இரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக டூவீலரில் உப்பார்பட்டி சென்றார். அப்போது உப்பார்பட்டி பிரிவில் தனியார் பஸ்,டூவீலர் மீது மோதி பலத்த காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
தனியார் பஸ் டிரைவர் ஜெயகுருபிரகாஷ் 33, மீது வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.