மதுரை, ; கோவாவில் ப்ளேகேஷன் அமைப்பு சார்பில் நடந்த தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி வீரர்கள் பங்கேற்றனர். 15 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் மாயா அஸ்வத் வெண்கல பதக்கம் வென்றார்.
15 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற 8 வயது ஸயூப் சைடின் 5வது இடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களை அகாடமி செயலாளர் பாலகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் சுந்தர், அருண்காந்த், வருண் பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement